இந்தியாஉலகம்

2019-2020 ஆண்டில் 60% இந்தியர்கள் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ளனர்!

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு மக்கள் இடம்பெயர்வது என்பது தற்போது இயல்பாகி விட்ட ஒன்று. இங்கிருந்து பிற நாடுகளுக்கு தொழில் ரீதியாக செல்பவர்கள், அங்கேயே அவர்களின் வாழ்க்கையை நிரந்தரமாக அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர்.

அதுமட்டுமின்றி வேறு சில காரணங்களுக்காகவும் குடியுரிமை பெற வேண்டும் என்று எண்ணுகின்றனர். எனவே அவர்கள் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நார்வே, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் குடியுரிமை கோரி பல்வேறு நாட்டை சேர்ந்த பல லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2019 முதல் 2020 வரை உள்ள ஆஸ்திரேலிய அகதிகள் சுமார் 2 லட்சம் பேருக்கு இந்த வருடம் ஆஸ்திரேலியக் குடியுரிமையை ஆஸ்திரேலிய அரசுக் கொடுத்துள்ளது.

இதில் 38,209 பேர் இந்தியர்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 60% இந்தியர்கள் அதிகமாக குடியுரிமை பெற்றுள்ளனர்.

மேலும் இதுகுறித்து அந்த நாட்டின் குடியுரிமை மற்றும் கலாச்சார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் ஆலன் டுட்ஜ் அவர்கள் கூறுகையில், வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற விரும்புவதற்கான காரணம் அவர்கள் இந்த நாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் மதிப்பீடுதான். கொரோனா காலகட்டத்திலும் குடியுரிமை சேவை அமைச்சகம் ஆன்லைன் மூலம் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குடியுரிமை வழங்கி உள்ளது என்று கூறியுள்ளார்.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close