இந்தியாஉலகம்கவர் ஸ்டோரி

இந்தியாவிற்கு வந்தது ஃரபேல் போர் விமானங்கள் – சீனாவை எதிர்கொள்ள லடாக் எல்லையில் நிறுத்த மத்திய அரசு தீவிரம்

இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஃரபேல் போர் விமானங்கள், அம்பாலா விமானப்படை தளத்திற்கு வந்தடைந்தன. இதனால் விமான தளப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ராணுவ பலத்தை கூட்டும் வகையில், பிரான்ஸ் நாட்டில் இருந்து ரஃபேல் போர் விமானங்களை பெற மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. விமானங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

பல்வேறு சர்ச்சைகளை கடந்து, 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 39 ஃரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. அதன்படி, நேற்று முன்தினம் பிரான்சில் இருந்து முதல்கட்டமாக ஐந்து ஃரபேல் விமானங்கள் புறப்பட்டன.

ஐக்கிய அரபு அமீரகம் வழியாக  சுமார் ஏழாயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து, ஹரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்திற்கு ஃரபேல் போர் விமானங்கள் வந்தடைந்தன. இந்த 5 விமானங்களையும் சுகாய் போர் விமானங்கள் வழி நடத்தி வந்த காட்சி அனைவரையும் பிரமிக்க வைத்தது.

ஃரபேல் விமானங்கள் தரையிறங்குவதால்,  அம்பாலா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில்  இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டு, லடாக் எல்லையில் சீனாவை எதிர்கொள்ளும் வகையில் ரபேல் விமானங்கள் நிறுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆகாயத்தில் பறந்தவாறே நிலம் மற்றும் நீர் பகுதியில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்ட ரஃபேல் போர் விமானங்கள், இந்திய விமானப்படையை மேலும் வலுவாக்கும் என்பதில் ஐயமில்லை.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close