அரசியல்கவர் ஸ்டோரிதமிழ்நாடு

இனி ஆதாரமற்ற பொய் செய்திகளை வெளியிடக் கூடாது-மாரிதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவு

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு எதிராக வெளியிட்ட விடீயோக்களை நீக்க வேண்டும், இனி ஆதாரமற்ற பொய் செய்திகளை வெளியிடக் கூடாது என மாரிதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நியூஸ் 18 தொலைக்காட்சியை பற்றியும், அதில் பணிபுரிந்து வரும் நபர்களின் தனிப்பட்ட விவகாரங்களை பற்றியும் யூ-டியூபில் மாரிதாஸ் என்பவர் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் நியூஸ் 18 அதிகாரி தனக்கு கடிதம் எழுதி இருந்ததாகவும் ஒரு மின்னஞ்சலை வெளியிட்டார். ஆனால் அந்த மின்னஞ்சல் போலியானது என்று அந்த அதிகாரி கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து மாரிதாஸ் மேல் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

நியூஸ் 18 தமிழின் ஆசிரியர் குணசேகரன் மாரிதாஸ் மீது ரூ.1.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், நியூஸ் 18 நிர்வாகம் சார்பில் “மக்களிடையே மதப் பிளவு ஏற்படுத்தும் வகையிலும், செய்தியாளர்களை மிரட்டும் வகையிலும் மாரிதாஸ் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்” என்று நீதிமன்றத்தில் தனி தனியே புகார் மனு அளிக்கப்பட்டது.

இதில் நியூஸ் 18 மனு மீதான விசாரணை இன்று நடந்தது. நியூஸ் 18 தரப்பில் மாரிதாஸ் கூறியது பொய் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்ற, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன், “மாரிதாஸ் இதுவரை நியூஸ் 18 தமிழ்நாடு தொடர்பாக வெளியிட்ட வீடியோக்களை நீக்க வேண்டும். தனி நபர் யாராக இருந்தாலும் ஆதாரமற்ற செய்திகளை வெளியிட கூடாது. வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் மாரிதாஸ் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

Tags

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close