சென்னைதமிழ்நாடு

பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய வழக்கு – பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி கைது

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்த கிஷோர் கே சாமி என்ற பாஜக ஆதரவாளரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர்.

கிண்டியில் மதன் ரவிச்சந்திரன் என்பவரின் youtube சேனலில் இருந்த போது, அவரை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.

 

இவர் மீது பல்வேறு பத்திரிக்கையாளர் அமைப்புகள் காவல்நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close