Uncategorizedஇந்தியாஉலகம்கவர் ஸ்டோரிகேரளா

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் கேரள இளைஞர்கள் – மத்திய நுண்ணறிவுப் பிரிவு அதிர்ச்சி தகவல்

கேரளாவை சேர்ந்த 149 பேர், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாக,  மத்திய நுண்ணறிவுப் பிரிவு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள சிலருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொண்டது. மேலும், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாகவும் ஐ.நா அதிர்ச்சி தகவலை அண்மையில் வெளியிட்டது

இந்தநிலையில், கடந்த 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரை கேரள மாநிலம், காசர்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம், எர்ணாகுளம், இடுக்கி, கொல்லம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 149 பேர் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துள்ளதாக, மத்திய நுண்ணறிவுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலும், போலி ஆவணங்கள் மூலம் துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகருக்கு புனிதப் பயணம் மேற்கொள்வதாக கூறி சென்ற 32 பேர் வளைகுடா நாடுகளில் கைது செய்யப்பட்டனர். இவர்களும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது.

இதுதொடர்பாக பேசிய முதல்வர் பினராயி விஜயன், கேரளாவை சேர்ந்த சிலருக்கு ஐ.எஸ். தொடர்பு குறித்து, மாநில நுண்ணறிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு ஏற்கனவே விசாரணையை துவங்கி விட்டதாகவும், சிறப்பு படை அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Tags

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close