கோவைதமிழ்நாடு

அடகுக்கடை உரிமையாளரை வெட்டிய இந்து முன்னணி தொண்டர்கள்!!

கோவையில் கொலுசை அடமானமாக வாங்க முடியாது என்று சொன்னவரை, இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த இருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.
கோவை ராமநாதபுரம் பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் அடகுக் கடை நடத்தி வருகிறார். அவர் தனது கடையில் தங்க நகைகளை மட்டுமே அடமானமாக வைத்து பணம் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை அந்த பகுதியை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகளான தீபக் (23),சபரீசன்(33) ஆகியோர் வெள்ளிக் கொலுசு ஒன்றை அடமானம் வைக்க ராஜமாணிக்கம் கடைக்கு வந்துள்ளனர். உடனே ராஜமாணிக்கம் வெள்ளி பொருட்களை வாங்குவது இல்லை என்று கூறியுள்ளார்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தீபக், சபரீசன் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராஜமாணிக்கத்தின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டியுள்ளனர்.

இதனால் அலறித்துடித்த ராஜமாணிக்கத்தின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீபக் மற்றும் சபரீசன் இருவரையும் கைது செய்தனர். அப்போது நடத்திய விசாரணையில் மது அருந்த பணம் இல்லாததால் கொலுசை திருடிவந்து அடகு வைக்க முயன்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Articles

12 Comments

  1. obviously such as your website but you ought to check out the spelling on a good number of of the posts.
    Several turn out to be rife with spelling issues and that i in locating it
    very troublesome to tell the reality nevertheless I am going to
    definitely come back again.

    My web page GreggDPfundt

  2. I like what you guys are up too. Such intelligent work and reporting! Carry on the superb works guys I have incorporated you guys to my blogroll. I think it’ll improve the value of my web site 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button