கவர் ஸ்டோரிசினிமாசெய்திகள்தமிழ்நாடுவைரல்

சுற்றுச்சூழலை பாதுகாக்க நாம் மௌனம் கலைத்து போராடுவோம் – நடிகர் சூர்யா அழைப்பு

நாட்டின் சுற்றுச்சூழலை காக்க, நாம் மௌனம் கலைத்து போராட தயாராக வேண்டும் என சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு 2020 வரைவை எதிர்த்து நடிகர் சூர்யா அழைப்பு விடுத்துள்ளார் .

மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு 2020 வரைவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த வரைவு, முதலீட்டுக்கும் தொழில் வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளிப்பதால், நாட்டின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனிடையே, எதிர்கால சந்ததியினர் வாழ்வை அழிக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு 2020 வரைவு தேவையா? என நடிகர் கார்த்தி கேள்வி எழுப்பினார். இயற்கை வளங்களை அழித்து, வளர்ச்சியின் அடையாளமாக காட்டுவது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்று நடிகர் கார்த்தி கூறினார். மேலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு 2020 வரைவில் தேவையான மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என தனது அறிக்கையில் வலியுறுத்தினார்.

இந்தநிலையில், நடிகர் கார்த்தியின் அறிக்கையை முன்மொழிந்து, அவரது அண்ணன் நடிகர் சூர்யா தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க என குறிப்பிட்டுள்ளார். மேலும், பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது என்பதால், நாம் மௌனம் கலைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags

Related Articles

2 Comments

  1. Thanks for your marvelous posting! I definitely enjoyed reading it, you will be a great author.I will remember to bookmark your blog and will come back later on. I want to encourage you to ultimately continue your great posts, have a nice day!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close