தூத்துக்குடி

பெற்ற மகளயே பாலியல் பலாத்காரம் செய்த தந்தையும் அவரது நண்பரும்

தூத்துக்குடியில் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார் புரத்தைச் சேர்ந்தவர் குருசாமி மகன் முருகன் (47), இவர் தனது 16 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து அவரது நண்பரான எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த மணி மகன் தங்கமுருகன் (23), என்பவரிடம் தெரிவித்திருக்கிறார். இதனை கேட்ட தங்கமுருகன் நயவஞ்சக எண்ணத்தோடு, அவன் இச்சைக்காக அவனும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையறிந்த அவரது தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்துள்ளார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு  போக்ஸோ சட்டத்தின் கீழ் முருகனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதில் தலைமறைவாக உள்ள தங்க முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Articles

3 Comments

  1. Hi there, i read your blog occasionally and i own a similar one and i was just wondering if you get a lot of spam feedback? If so how do you prevent it, any plugin or anything you can advise? I get so much lately it’s driving me crazy so any assistance is very much appreciated.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button