இந்தியாகவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடு

கொரோனா சோதனையில் குளறுபடி – நெகடிவ் என அறியப்பட்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனையில் பாசிடிவ்

நெகடிவ் என அறியப்பட்ட நபர்களுக்கு, ஆர்டி-பிசிஆர் சோதனையில் பாசிடிவ் என வந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்தியாவில் அச்சுறுத்தி வரும் கொரோனாவை தடுக்க, முழு வீச்சில் மத்திய, மாநில சுகாதாரத்துறைகள் ஈடுபட்டுள்ளன. நாட்டில் ஒருவருக்கு கொரோன தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய ஆன்டிஜென் முறையில் சோதனை செய்யப்பட்டது.

இந்தநிலையில், கொரோனா தொற்று தொடர்பாக மும்பையின் இரண்டு பெரிய ஆய்வகங்களில் ஆன்டிஜென் சோதனைகளில் மூலம் பெறப்பட்ட முடிவுகளில் 65% பேர் நெகடிவ் என அறியப்பட்டது. ஆனால், ஆர்டி-பி.சி.ஆர் சோதனையில், நெகடிவ் முடிவுகளைப் பெற்ற சுமார் 15% நோயாளிகளுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த தமிழக அரசு, ஆன்டிஜென் சோதனை முறையை கைவிட்டு, ஆர்டி-பி.சி.ஆர்  மூலம் கொரோனா நோயாளிகளுக்கு சோதனை மேற்கொண்டு வருகிறது. விரைவான ஆன்டிஜென் சோதனை முடிவுகள், வைரஸ் பரவலை சரியாக கண்டறியவில்லை என தற்போது உறுதியாகி உள்ளது.

விரைவான ஆன்டிஜென் முறையைப் பயன்படுத்தி டெல்லியில் சுமார் மூன்றரை லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் டெல்லி மக்கள் பீதியில் உள்ளனர்.

Related Articles

3 Comments

  1. Howdy would you mind sharing which blog platform you’re working with? I’m going to start my own blog in the near future but I’m having a difficult time making a decision between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your layout seems different then most blogs and I’m looking for something completely unique. P.S Sorry for getting off-topic but I had to ask!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button