அரசியல்சினிமாசென்னைதமிழ்நாடு

ரஜினி பா.ஜ.க.வில் இணைந்தால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றுவோம் – தயாரிப்பாளர் அதிரடி

நடிகர் ரஜினியை கட்சியில் இணைக்கவே, பா.ஜ.க.வில் சேர்ந்ததாக பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் தெரிவித்துள்ளார் .

தமிழகத்தில் பாஜக கட்சியை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில தலைவர் எல்.முருகன் எடுத்து வருகிறார். இதற்காக கட்சியின் அனைத்து பிரிவுகளிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, நடிகரும், தயாரிப்பாளருமான பிரமிட் நடராஜன், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார்.

இந்தநிலையில், பாஜகவில் இணைந்தது குறித்து பேட்டியளித்த பிரமிட் நடராஜன், பாஜக மற்றும் பிரதமர் மோடி மீது அசைக்க முடியாத நம்பிக்கையை ரஜினிகாந்த் வைத்துள்ளதாக குறிப்பிட்டார். அவர் கட்சியில் இணைந்து, தமிழ்நாட்டுக்கு தலைமையேற்க வேண்டும் என்பது தான் தன்னுடைய விருப்பம் என்றும், கட்சி ஆரம்பிக்காத பட்சத்தில், ரஜினியை பாஜகவுடன் இணைக்க தொடர்ந்து பாடுபடுவேன் என பிரமிட் நடராஜன் கூறினார்.

தமிழ்த் திரையுலகில் ராதாரவி, மதுவந்தி, கெளதமி, விஜயகுமார், குட்டி பத்மினி, நமீதா, ஜெயலட்சுமி, கஸ்தூரி ராஜா, கங்கை அமரன், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலரும் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close