இந்தியா

கொரோனாவை கண்டறிய 30 வினாடிகள்…

இஸ்ரேலுடன் இணைந்து இந்தியா கொரோனா தொற்றை கண்டறியும் நவீன கருவியை உருவாக்குகிறது.

கொரோனா பல நாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, பலி எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டுத்தான் இருக்கிறது. கொரோனா தொற்றை கண்டறிந்து தனிமைப்படுத்தினாலும், அதன் பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால் தொற்றை வேகமாக கண்டறிய நவீனா கருவியை உருவாக்குவதில் மத்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த பணிகளில் இஸ்ரேலிய நிபுணர் குழுவுடன் இணைந்து டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் பணியாற்ற உள்ளனர்.

இதற்காக இஸ்ரேலிய உயர்மட்ட நிபுணர் குழு ஒன்று சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தது. அவர்கள் தங்கள் நாட்டில் உள்ள அதிநவீன கருவிகளையும் தங்களுடன் கொண்டுவந்துள்ளனர். இந்த நிபுணர்கள் இந்தியாவின் தலைமை விஞ்ஞானி விஜய் ராகவன் மற்றும் டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வுப்பணிகளை செய்துவருகின்றன.

இந்த அதிநவீன கருவி உருவாக்கப்பட்டால் 30 வினாடிகளில் கொரோனா தொற்றை கண்டறிய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

Related Articles

3 Comments

  1. Thank you, I’ve just been looking for info about this topic for ages and yours is the best I have discovered so far. But, what about the bottom line? Are you sure about the source?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button