இந்தியாகவர் ஸ்டோரிசெய்திகள்

இந்தியாவை நோக்கி மீண்டும் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள் – விவசாயிகள், பொதுமக்கள் அச்சம்

வெட்டுக்கிளிக் கூட்டங்கள், இந்தியாவுக்குள் மீண்டும் படையெடுக்க வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா இன்னும் மீளாத நிலையில், அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், ராஜஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள், 9 மாவட்டங்களில் படையெடுத்தன.

இதனால், பல லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட உணவு தானியங்களை வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தியது. மத்திய அரசின் துரித நடவடிக்கையால், வெட்டுக்கிளி கூட்டங்கள் அழிக்கப்பட்டன. இதனால், ராஜஸ்தானைத் தவிர பிற மாநிலங்களில் பெரிய அளவில் பயிர் இழப்பு ஏற்படவில்லை.

இந்தநிலையில், மீண்டும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்த மாத இறுதியில் இருக்கும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. சோமாலியாவில் இருந்து புறப்படும் இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வரும் என்பதால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் பயிர்களை வெட்டுக்கிளிகளிடம் இருந்து பாதுகாப்பதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்கான புதிய யுக்தியை கையாள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

 

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button