ஆந்திராஇந்தியாகிரைம்வைரல்

3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலி ஐ.பி.எஸ். பெண்….

ஐ.பி.எஸ். என்று கூறிக்கொண்டு 3 ஆண்களை ஏமாற்றிய பெண் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஆந்திராவைச் சேர்ந்த ஆஞ்சநேயலு என்பவர், டென்மார்க் நாட்டில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மேட்ரிமோனி மூலம் திருப்பதியை சேர்ந்த சொப்னா என்ற ஐபிஎஸ் அதிகாரியை கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

விடுமுறை முடிந்ததும் டென்மார்க் வருமாறு ஆஞ்சநேயலு அழைத்தபோது, மனைவி சொப்னா மறுத்துவிட்டார். பின்னர் ஆஞ்சநேயலு மட்டும டென்மார்க் சென்று விட, சொப்னா தனது மாமனார், மாமியாருடன் ஹைதராபாத்தில் வசித்து வந்துள்ளார்.

இதனிடையே உங்கள் மகள் ஏமாற்றி விட்டதாகவும், தனக்கு இழப்பீடு தர வேண்டும் என வீட்டில் தகராறு செய்துள்ளார் சொப்னா. இதனால் மனவேதனை அடைந்த ஆஞ்சநேயலுவின் பெற்றோர், போலீசில் புகார் தெரிவித்தனர்.

அப்போது தான் சொப்னா குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத் தொடங்கின. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், சொப்னா ஐ.பி.எஸ் இல்லை என்பதும் அவரது உண்மையான பெயர் ரம்யா என்றும் தெரிய வந்தது.

அத்துடன், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்திவிராஜ். ஆத்மகூரை சேர்ந்த சுதாகர் என்பவரையும் வெவ்வேறு பெயர்களில் சொப்னா ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஐ.பி.எஸ். என்று கூறிக்கொண்டு 3 ஆண்களை ஏமாற்றிய சொப்னா, 3 மாதம் கர்ப்பமான  நிலையில், போலீசார் கைது செய்தனர். அவரை காப்பகம் ஒன்றில் சேர்த்த போலீசார், வேறு யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கியுள்ளனர்.

Related Articles

4 Comments

  1. hello!,I like your writing very so much! percentage we communicate more about your post on AOL? I require an expert in this area to solve my problem. Maybe that is you! Taking a look forward to see you.

  2. I just like the valuable information you provide on your articles. I’ll bookmark your blog and take a look at once more right here regularly. I’m fairly sure I will be told many new stuff proper right here! Best of luck for the following!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button