இந்தியாஉலகம்வைரல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் 13 வயது சிறுமி செய்த மிகப்பெரிய உதவி என்ன தெரியுமா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கித் தவித்த 60-க்கும் மேற்பட்ட இந்தியர்களை தாயகம் திரும்ப உதவிய 13 வயது சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

உலக முழுவதும் கொரோனா தொற்று அசூர வேகத்தில் பரவி வருவதால், பல்வேறு நாடுகள் தனது எல்லைகளை மூடியுள்ளன .இதனால், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் பலர் தாயகம் திரும்ப முடியாமல் உள்ளனர்.

குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தில், விமான டிக்கெட் எடுக்கக்கூட பணம் இல்லாமல் பலர் தவித்து வருகின்றனர். இந்தநிலையில், 3 வயது சிறுமி அனன்யா, சுமார் 60-க்கும் மேற்பட்ட இந்தியர்களை, தொழில் அதிபரின் உதவியுடன் இந்தியா கொண்டு வர உதவியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்த சிறுமி அனன்யா, ஷார்ஜாவில் உள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில், தான் சேமித்து வைத்திருந்த ரூ.61,000 பணத்தை 2 இந்தியர்களுக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்து அவர் உதவியுள்ளார்.

மேலும், சிறுமியின் கோரிக்கையை ஏற்று, துபாயை சேர்ந்த தொழிலதிபரான அமிரூதின் அஜ்மல், ரூ.20,00,000 செலவு செய்து 66 பேருக்கு டிக்கெட் எடுத்து கொடுத்துள்ளார். தாயகம் திரும்ப உதவிய சிறுமி மற்றும் தொழில் அதிபருக்கு 68 பேரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

6 Comments

  1. Generally I do not read article on blogs, however I wish to say that this write-up very pressured me to check out and do it! Your writing style has been surprised me. Thanks, quite nice post.

  2. Thanks for sharing superb informations. Your site is so cool. I’m impressed by the details that you’ve on this blog. It reveals how nicely you understand this subject. Bookmarked this website page, will come back for more articles. You, my pal, ROCK! I found just the information I already searched everywhere and just couldn’t come across. What a perfect web site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button