இந்தியாஉத்தரபிரதேசம்

முகக்கவசம் அணியாததால் ஆடுகளை கைது செய்த போலீசார்- வியக்க வைத்த கடமை உணர்ச்சி

உத்தரபிரதேச மாநிலத்தில் முகக்கவசம் அணியாத இரண்டு ஆடுகளை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில், தெருவில் இரண்டு ஆடுகள் முகக்கவசம் இல்லாமல் திரிந்துள்ளன. அதை கண்ட போலீசார் உடனே அவற்றை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி சென்றுள்ளனர் .

இந்த தகவலை அறிந்த ஆட்டின் உரிமையாளர் முகக்கவசம் அணிந்து காவல்நிலையத்துக்கு சென்றுள்ளார். பின் போலீசாரிடம் மன்றாடி ஆடுகளை மீட்டு வந்துள்ளார். அவரை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த தகவல் வெளியே வந்ததும் அது குறித்து கூறிய போலீசார், ஆட்டின் அருகில் இருந்த நபர் முகக்கவசம் இல்லாமல் இருந்துள்ளார். அவர் போலீசை பார்த்ததும் அங்கிருந்து ஓடி விட்டார். அதனால் தான் ஆட்டை கைது செய்தோம் என்று கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் அங்கிருந்த காவலர் முகக்கவசம் அணியாததால் தான் ஆட்டை கைது செய்தோம் என்று கூறியதோடு, நாய்களுக்கே மாஸ்க் அணிவிக்கும் போது ஆடுகளுக்கு ஏன் போடக்கூடாது என்றும் கேட்டுள்ளார்.

Related Articles

2 Comments

  1. Hello very cool website!! Guy .. Beautiful .. Superb .. I will bookmark your site and take the feeds additionally…I’m happy to seek out a lot of useful information here in the put up, we need develop more techniques in this regard, thanks for sharing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button