தமிழ்நாடுவிழுப்புரம்

மருத்துவபடிப்புக்காக சாதி சான்றிதழ் கோரிய மாணவி தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

விழுப்புரம் மாவட்டத்தில் மேற்படிப்புக்காக சாதி சான்றிதழ் கோரிய மாணவியை ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், பரங்கினி பகுதியை சேர்ந்த தனலட்சுமி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 438 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவர் சமீபத்தில் வெளியான 12ம் வகுப்பு தேர்விலும் 354/600 மதிப்பெண் எடுத்து விழுப்புரம் மாவட்டம் புதுக்குப்பம் அரசினர் பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவருக்கு மருத்துவப்படிப்பு படிக்க விருப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்லூரியில் சேர முடியவில்லை.

தனலட்சுமி பல முறை சாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்தும் அவருக்கு அது கிடைக்கவில்லை. எனவே 14 அடையாள ஆதாரங்களின் நகல்களை இணைத்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் தனலட்சுமியின் விண்ணப்பம் குறித்து விசாரிக்க பரங்கினி கிராமத்திற்குச் சென்றபோது, அவருக்கு உரிய சாதி சான்றிதழ் கொடுக்கக்கூடாது என்று அந்த பகுதியை சேர்ந்த ஆதிக்க சாதியை சேர்ந்த சிலர் கூறியுள்ளனர்.

மேலும், தனலட்சுமியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீது ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியும் உள்ளனர்.

Related Articles

10 Comments

  1. Hi there, just became alert to your site through Google, and discovered that it
    is actually truly informative. I’m going to watch out for brussels.
    I’ll appreciate if you continue this later on. Lots of people will be benefited from your
    writing. Cheers!

    Here is my homepage WallacePMeer

  2. This is really interesting, You are a very skilled blogger. I’ve joined your rss feed and look forward to seeking more of your magnificent post. Also, I’ve shared your web site in my social networks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button