இந்தியாகவர் ஸ்டோரிசென்னைசெய்திகள்தமிழ்நாடு

ஓ.பி.சிக்கு 50% இடஒதுக்கீடு சட்டம் – மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி

மருத்துவ படிப்பில் ஓ.பி.சிக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு விரைந்து சட்டம் இயற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தி.மு.க, ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு முறை இருக்கும்போது மத்திய அரசு 27% இடஒதுக்கீடு வழங்குவது தவறானது என தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். மருத்துவ மேற்படிப்புகளில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அவசியமில்லை என நீதிமன்றங்களில் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பட்டது.

இந்தநிலையில், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தபோது, அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் வாதிட்டது.  இதனை நிராகரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மத்திய அரசு சட்டரீதியாக உத்தரவு பிறப்பிக்க இயலும் என்று தெரிவித்தது.

எனவே, மருத்துவ படிப்பில் ஓ.பி.சிக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக, மத்திய அரசு விரைந்து சட்டம் இயற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக மத்திய அரசு 3 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி நீதிபதிகள்,மத்திய-மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவற்றோடு கலந்தாலோசித்து முடிவுகள் அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், மத்திய அரசு கட்டுப்பாட்டில் இல்லாத மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது-

 

 

 

Related Articles

8 Comments

 1. My brother recommended I might like this blog. He used to be totally right. This put up truly made my day. You can not believe just how so much time I had spent for this information! Thanks!

 2. I will immediately clutch your rss as I can’t find your email subscription link or newsletter service. Do you’ve any? Please allow me recognize in order that I may subscribe. Thanks.

 3. Appreciating the dedication you put into your site and in depth information you provide. It’s great to come across a blog every once in a while that isn’t the same unwanted rehashed material. Wonderful read! I’ve bookmarked your site and I’m including your RSS feeds to my Google account.

 4. I know this if off topic but I’m looking into starting
  my own weblog and was wondering what all is needed to get
  setup? I’m assuming having a blog like yours would
  cost a pretty penny? I’m not very internet savvy so I’m not 100% sure.
  Any recommendations or advice would be greatly appreciated.
  Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button