அரசியல்இந்தியாகவர் ஸ்டோரிசெய்திகள்

பா.ஜ.க. சதி திட்டம் – காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க முயன்றால், பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம் என முதல்வர் அசோக் கெலாட் எச்சரித்துள்ளார்.

பெரும்பான்மையான மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள பா.ஜ.க, ராஜஸ்தானிலும் தன்னுடைய கைவரிசையை காட்டத் தொடங்கியுள்ளது. மாநிலத்தை ஆளும் காங்கிரசில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து துணை முதலமைச்சரான சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் அதிரடியாக நீக்கப்பட்டனர். மேலும், தகுதி நீக்கம் செய்யட்ட அனைவரையும், சபாநாயகர் தகுதியிழப்பு நோட்டீஸ் அனுப்பி வைத்தார்.

இதனிடையே, முதல்வர் அசோக் கெலாட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த அழைப்பு விடுக்குமாறு ஆளுநர் கல்ராஜ் மிஷ்ராவை வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், ராஜஸ்தான் ஆளுநரை பா.ஜ.கவினர் சந்தித்து பேசியதால், காங்கிரஸ் கட்சியினர் ஆவேசம் அடைந்தனர்.

ராஜஸ்தானில் ஜனநாயக படுகொலையை நிகழ்ந்த பா.ஜ.க முயல்வதாக சாடியுள்ள முதல்வர் அசோக் கெலாட், இதனை கண்டித்து பிரதமர் மோடியின் வீட்டு முன்பு போராட்டம் நடத்த போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிட போவதாகவும் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

Related Articles

5 Comments

  1. The next time I read a blog, I hope that it doesnt disappoint me as much as this one. I mean, I know it was my choice to read, but I actually thought youd have something interesting to say. All I hear is a bunch of whining about something that you could fix if you werent too busy looking for attention.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button