சினிமாபொழுதுபோக்கு

மீண்டும் களத்தில் இறங்கிய தமிழ் ராக்கர்ஸ்! –

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படமான ‘தில் பெச்சாரா’, நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால், எல்லா படமும் போல இந்த படமும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் சுஷாந்த் சிங், சஞ்சனா சங்கி, சைஃப் அலி கான் உட்பட பலர் நடித்துள்ளனர். முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

இந்த படமானது பிரபலமான OTT தளமான டிஸ்னி+ மற்றும் ஹாட்ஸ்டாரில் நேற்று வெளியானது. ஹாலிவுட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘The Fault in Our Stars’ என்ற படத்தின் ரீமேக் தான் இந்த படம். இரு கேன்சர் நோயாளிகள் எப்படி காதலித்து தங்கள் வாழ்க்கையை மாற்றுகிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

Dil Bechara Review : Can Dil Bechara Be Watched Without Disney+ ...

மேலும் இந்தப் படத்தை சுஷாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து ரசிகர்களும் பார்ப்பதற்காக இலவசமாக வெளியிட்டுள்ளது டிஸ்னி+.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் உலகளவில் 80 மில்லியன் பார்வைகளையும், 10 மில்லியன் லைக்குகளையும் பெற்று ரெக்கார்டு பிரேக்கிங் செய்திருக்கிறது. இந்நிலையில் வழக்கமாக படங்களை திருட்டுத்தனமாக ஆன்லைனில் லீக் செய்யும், தமிழ்ராக்கர்ஸ் இந்தப் படத்தையும் விட்டு வைக்கவில்லை

இந்தப் படம் நேற்று OTT தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே, ஆன்லைனில் HD தரத்தில் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே டிஸ்னி+ மற்றும் ஹாட் ஸ்டார் இலவசமாக வெளியிட்டுள்ள நிலையில் தமிழ்ராக்கர்ஸ் ஏன் திருட்டுத்தனமாக இதை வெளியிட வேண்டும்? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

“அட என்னதான் இருந்தாலும் தமிழ் ராக்கர்ஸுக்குனு தனி ரசிகர் கூட்டமே இருக்கு. அது மட்டுமில்லாம தமிழ் ராக்கர்ஸும் சுஷாந்த் சிங்குக்கு அஞ்சலி செலுத்தணும் னு இத பிரீ யா ரிலீஸ் பண்ணிருக்கலாம்.” என்று மற்ற சிலரிடமிருந்து இதற்கு பதில் வந்திருக்கிறது.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button