கல்விகல்வி வேலை வாய்ப்புகவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடு

கல்வியாளர்கள் எதிர்ப்பு – சென்னை தனியார் பள்ளியில் மாதந்திர தேர்வு ரத்து

மாலைமுரசு தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியின் எதிரொலியால், ஊரடங்கிலும் சென்னையில் தனியார் பள்ளியில் நடைபெற்று வந்த மாதந்திர தேர்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் பெரும்பாலான தனியார் பள்ளிகள், மாணவர்கள் வீட்டிலிருந்து படிக்கும் வகையில், ஆன்லைனில் வகுப்புகள் நடத்தி வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கும், தமிழக அரசு தொலைக்காட்சியின் வாயிலாக ஆன் லைன் வகுப்புகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், சென்னை கேளம்பாக்கம் பகுதியில் செயல்படும் பிரபல சுசில் ஹரி இன்டர்னேஷ்னல் ரெசிடென்சி என்ற தனியார் பள்ளியில் தேர்வு எழுதுவதற்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளிக்கு வந்துள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, மாலைமுரசு தொலைக்காட்சி செய்தி பிரிவினர் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்

அப்போது மாதந்திர தேர்வு எழுத மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்திருப்பதும், இதற்காக தேர்வு அட்டவணையும் பள்ளி நிர்வாகம் வெளியிட்டிருப்பதும் தெரியவந்தது.

மேலும், பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுதும் காட்சிகளையும் மாலைமுரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மாணவர்களை தேர்வு எழுத கட்டாயப்படுத்திய தனியார் பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர் .

இதனையடுத்து, மாலைமுரசு தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியின் எதிரொலியால், ஊரடங்கிலும் சென்னையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற தேர்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

Related Articles

2 Comments

  1. wonderful put up, very informative. I’m wondering why the opposite experts of this sector do not notice this. You must proceed your writing. I am sure, you have a great readers’ base already!

  2. Hi, I think your site might be having browser compatibility issues. When I look at your website in Safari, it looks fine but when opening in Internet Explorer, it has some overlapping. I just wanted to give you a quick heads up! Other then that, fantastic blog!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button