இந்தியாகவர் ஸ்டோரிகேரளா

கேரள தங்கம் கடத்தல் வழக்கு – ஸ்வப்னா பரபரப்பு வாக்குமூலம்

ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உதவியுடன் கார்கோ விமானத்தில் காய்கறிகளுக்குள் மறைந்து தங்கம் கடத்தியதாக ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவரது வங்கி லாக்கரை சோதனை செய்தபோது, ஒரு கிலோ தங்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துபாயில் இருந்து, கடந்த 5 ஆம் தேதி, கேரளாவுக்கு வந்த பார்சலில், 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் பெயருக்கு அனுப்பப்பட்ட இந்த பார்சலை, திருவனந்தபுரம் விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, சந்தீப் நாயர், ஸ்வப்னா சுரேஷ், சரித் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம், சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கைது செய்யப்பட்ட 4 பேருடன், கேரள முதல்வரின் முதன்மை செயலரும், தகவல் தொழில்நுட்ப துறை செயலருமான சிவசங்கரனுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடந்த வாரம், சுங்கத்துறை அதிகாரிகள், இவரிடம், ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கின் 3வது குற்றவாளியான பைசல் பரீத் துபாயில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், அவருக்கு சொந்தமான வீடு திருச்சூர் மாவட்டம், காய்ப்பமங்கலம் என்ற இடத்தில் உள்ளன. அங்கு சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ஒரு கணினி மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். மேலும், பைசல் பரீதின் வீட்டு சுவற்றில், அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டை என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.

இதற்கிடையே, சமீபத்தில் தற்கொலைக்கு முயன்ற, துாதரக பாதுகாப்பு போலீஸ் ஜெய கோஷ் வீட்டில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில், ஸ்வப்னா சுரேஷின் உத்தரவின் பேரில், தூதரக பெயருக்கு வந்த பார்சல்களை, விமான நிலையத்தில் இருந்து பலமுறை பெற்று வந்து கொடுத்ததை ஒப்புக் கொண்டார். இதனை தொடர்ந்து, ஜெய கோஷ் மற்றும் அவரது உறவினர்களின் வங்கி கணக்கு மற்றும் சொத்துக்களின் விபரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவனந்தபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் ஸ்வப்னா சுரேஷின் தனி லாக்கரை என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்ததில் ஒரு கிலோ தங்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவரிடன் என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில், கார்கோ விமானத்தில் காய்கறிகள் கொண்டு செல்லும் கண்டெய்னர்கள் மூலம் பணம் மற்றும் நகை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உதவியுடன் கடத்தப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

12 Comments

  1. Thanks for your entire efforts on this website. Kate really loves carrying out investigations and it’s easy to see why. A lot of people notice all about the compelling medium you offer simple items through your web site and even invigorate participation from other people about this issue so our own daughter is starting to learn a whole lot. Take pleasure in the remaining portion of the new year. You have been doing a remarkable job.

  2. I was curious if you ever thought of changing the page layout of your site? Its very well written; I love what youve got to say. But maybe you could a little more in the way of content so people could connect with it better. Youve got an awful lot of text for only having 1 or two images. Maybe you could space it out better?

  3. Hey There. I discovered your website using msn. This is certainly an extremely well written article.
    I’ll be sure to bookmark it and return to learn more of your useful info.
    Thank you for the post. I will definitely comeback.

    Have a look at my homepage; MikelFCopney

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button