அரசியல்கவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடு

ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் – வரி பாக்கியை செலுத்தியது அரசு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டுத் தொகையை உரியவர்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக பணிபுரிந்த ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ல் உடல் நலக்குறைவால் அவர் மரணம் அடைந்தார்.

மறைந்த ஜெயலலிதாவிற்கு சொந்தமான 24,322 சதுர அடி கொண்ட வேதா இல்லம், சென்னை போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ளது. இந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் எதிரப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டு தொகையாக ரூ.67 கோடியை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்துள்ளது.

மேலும் ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கி ரூ.36 கோடியை செலுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, போயஸ் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உரியவர்கள், இழப்பீட்டுத் தொகையை சிட்டி சிவில் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நினைவு இல்லத்தில் முகாம் அலுவலகம் அமைக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags

Related Articles

2 Comments

  1. Hello! I know this is kinda off topic however I’d figured I’d ask. Would you be interested in exchanging links or maybe guest writing a blog article or vice-versa? My blog covers a lot of the same topics as yours and I think we could greatly benefit from each other. If you’re interested feel free to shoot me an email. I look forward to hearing from you! Fantastic blog by the way!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close