அரசியல்இந்தியாகவர் ஸ்டோரி

பாஜகவுக்காக வேலை பார்த்ததா தேர்தல் ஆணையம்??- ஆதாரங்களோடு சமூக ஆர்வலர் பகிர் குற்றச்சாட்டு

மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளுக்கு பாஜகவின் ஐ.டி பிரிவை பயன்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மஹாராஷ்டிராவில் தற்போது சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. ஆனால் தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணியாக தேர்தலை சந்தித்தது. இதில் அந்த கூட்டணி வெற்றிபெற்றாலும் யார் முதல்வர் ஆவது என்கிற சண்டையால் கூட்டணி உடைந்தது.

இந்த தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற அரசு இயந்தரம் பயன்படுத்தப்பட்டதாக குரல் எழுந்தது.

இந்நிலையில், மஹாராஷ்டிராவை சேர்ந்த சமூகஆர்வலர் சாகேத் கோகலே தேர்தல் வெற்றிகளுக்கு தேர்தல் ஆணையத்தை பாஜக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி  ட்விட்டரில் இது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டுள்ளார்.

இதற்கு ஆதாரமாக தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்ட சமூக வலைத்தளங்களில் ‘202, பிரஸ்மேன் இல்லம், வில்லே பார்லே, மும்பை (202 Pressman House, Vile Parle, Mumbai) என்ற முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த முகவரியானது ‘சைன்போஸ்ட் இந்தியா ( Signpost India)’ என்னும் விளம்பர நிறுவனத்தின் முகவரி என்றும் இது பாஜக ஆதரவோடு செயல்பட்ட நிறுவனம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இந்த நிறுவனம் ‘சோசியல் சென்ட்ரல் (Social Central)’ என்னும் இணையதள ஏஜென்சியாக செயல்பட்டுவந்ததாகவும், இதன் உரிமையாளர் பா.ஜ.க வின் ஐ.டி. விங்கின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தேவாங்க தவே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு பா.ஜ.க ஐ.டி. விங்கின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தேவாங்க தவே மஹாராஷ்டிர தேர்தல் ஆணைய பணிகளையும் மேற்கொண்டுள்ளார். அதோடு இவர் பாஜக ஆதரவு இணைய பக்கங்களையும் நடத்தியுள்ளார்.

அதோடு இவர் நிறுவனத்தில் தேர்தல் ஆணையம் உற்பட பல்வேறு பல்வேறு அரசு நிறுவனங்களும் இருந்துள்ளன. இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் இந்த குற்றசாட்டு பலரால் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை தேர்தல் ஆணையம் இதற்கு எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

Related Articles

4 Comments

  1. Hi there! This is kind of off topic but I need some guidance from an established blog. Is it difficult to set up your own blog? I’m not very techincal but I can figure things out pretty fast. I’m thinking about making my own but I’m not sure where to begin. Do you have any ideas or suggestions? Thanks

  2. Howdy! I could have sworn I’ve been to this website before but after reading through some of the post I realized it’s new to me. Nonetheless, I’m definitely happy I found it and I’ll be book-marking and checking back frequently!

Leave a Reply to Brandon Grabowiecki Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button