இந்தியாஉலகம்கவர் ஸ்டோரிபாகிஸ்தான்வைரல்

பாக். ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் ஷாருக்கானுக்கு தொடர்பா?

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பை சேர்ந்தவர்களுடன், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவ உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்புடன், பாலிவுட் பிரபலங்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், இதற்கான ஆவணங்கள் கிடைத்திருப்பதாகவும் பாஜக துணை தலைவர் பைஜயந்த் ஜே பாண்டா அண்மையில் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் சிலருடன் தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பாலிவுட் பிரபலங்கள் நெருக்கம் கொண்டுள்ளது நாட்டிற்கு அச்சுறுத்தல் எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த இந்திய எதிர்ப்பாளர்களான ரெஹான் சித்திக் மற்றும் டோனி ஆஷாய் ஆகியோருடன் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

காஷ்மீரில் கலவரத்தை தூண்டுவதற்கு நிதி திரட்டியதாக, ரெஹான் சித்திக் மற்றும் டோனி ஆஷாய் ஆகியோர் மீது ஏற்கனவே புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

3 Comments

  1. You actually make it seem so easy together with your presentation but I to find this matter to be really one thing that I feel I’d by no means understand. It kind of feels too complicated and extremely large for me. I’m having a look ahead in your next publish, I will attempt to get the dangle of it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button