தமிழ்நாடு

திமுகவின் பிணஅரசியலை கண்டிக்கிறேன்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திமுகவின் பிணஅரசியலை கண்டிப்பதாக தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ராஜேந்திர பாலாஜி. இவர் சர்ச்சையான கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தனது ட்விட்டர் பதிவில் ஒரு கருத்தை பதிவேற்றியுள்ளார்.

அதில் “எங்கேயோ காணாமல்போன அண்டாவை கண்டுபிடிக்கும் துப்பறிவாளர் மாதிரி, மேக்கப் எல்லாம் போட்டு, கையை காலை ஆட்டி, பின்னணி இசையோட நாடகபாணியில் வீடியோவில் வாய்க்குவந்ததை உளறும் திமுக தலைவர் ஸ்டாலினின் கேடுகெட்ட பிணஅரசியலை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button