இந்தியாசினிமாவைரல்

தள்ளாத வயதில் சிலம்பம் சுற்றும் பாட்டி – உதவிக்கரம் நீட்டும் நடிகர்கள்

மகாராஷ்டிராவில் பாட்டி ஒருவர் தள்ளாத வயதிலும் சிலம்பம் சுற்றுக்கொண்டு சாலையில் உதவி கேட்டு வருவது வைரலாகியுள்ளது. இவருக்கு பாலிவுட் நடிகர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக, நாட்டில் பலரும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்தநிலையில், மஹாராஷ்ட்ரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 75 வயது ஆஜிமா பாட்டி, சாலையின் ஓரத்தில் சிலம்பம் சுற்றி உதவிக்கேட்டு வருகிறார்.

இதனை ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலர், பாட்டியை கண்டுபிடித்து உதவி செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில், பாலிவுட் நடிகர்களும் இணைந்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக், சோனு சூட் உட்பட பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். தள்ளாத வயதில் இவ்வளவு அழகாகச் சிலம்பம் சுற்றும் பாட்டியைப் நெட்டிசன்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

Related Articles

5 Comments

  1. Terrific work! This is the kind of information that are supposed to be shared around the web. Shame on Google for now not positioning this submit higher! Come on over and talk over with my site . Thank you =)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button