இலங்கைஉலகம்கவர் ஸ்டோரி

தமிழர்கள் கூட்டாட்சி கேட்டால் அவர்கள் வாழும் இடங்களில் ரத்த ஆறு ஓடும்- இலங்கை சிங்கள அமைப்பு மிரட்டல்

“தமிழர்கள் கூட்டாட்சி கோரினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ரத்த ஆறு ஓடும்” என்று இலங்கையின் பொதுபலசேனா என்கிற பவுத்த அமைப்பு கூறியுள்ளது

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர்கள் கூட்டாக பேட்டியளித்தனர். அதில் “அரசு வழங்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு தமிழர்கள் ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும். அதை விட்டு கூட்டாட்சி கோரினால் பின் அவர்கள் வாழும் கிழக்கு,வடக்கில் ரத்த ஆறு ஓடும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தேர்தல் எண்ணங்களை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் கூட்டாட்சி கோரியுள்ளனர். கூட்டாட்சி என்றால் தனிநாடு என்று தான் பொருள். இந்த கோரிக்கை இலங்கையை பிளவுபடுத்தும். இதில் மாற்றுக்கருத்து இல்லை. நீதிமன்றத்தின் வியாக்கியானத்தையும் தீர்ப்பையும் தூக்கி குப்பையில் போடுங்கள்.

ராஜபக்சேக்களின் இந்த ஆட்சிக்காலத்தில் ஆட்சியுடனும், சிங்கள மக்களுடனும் ஒன்றுபட்டு பயணிக்க தமிழர்கள் முன்வர வேண்டும். இது சிங்கள பவுத்த நாடு. எனவே தமிழர்கள் தனிவழியில் நிற்காமல் சிங்கள மக்களுடன் இணைத்து பயணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம் .

அப்போது தான் சிங்கள மக்கள் விரும்பும் தீர்வை தமிழர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இல்லையேல் தீர்வு என்பது தமிழர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கும், பிரபாகரன் வழியில் செயல்படுவதை தமிழ் அமைப்புகளும், தமிழ் மக்களும் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த அறிக்கை தமிழக மக்களிடையே கண்டனத்தை பெற்று வருகிறது.

Related Articles

4 Comments

  1. It’s actually a great and useful piece of information. I’m glad that you simply shared this useful information with us. Please keep us informed like this. Thanks for sharing.

  2. Oh my goodness! an incredible article dude. Thank you Nonetheless I am experiencing problem with ur rss . Don’t know why Unable to subscribe to it. Is there anybody getting identical rss problem? Anybody who knows kindly respond. Thnkx

  3. Thanks for any other informative site. The place else could I get that type of information written in such a perfect approach? I’ve a challenge that I’m just now operating on, and I’ve been at the look out for such information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button