சினிமாபொழுதுபோக்கு

தனது முதல் படத்தை பற்றி மனம் திறந்த ஹரிஷ் கல்யாண்!

பிக் பாஸ் மூலமாக பிரபலடைந்த நடிகர்களில் ஒருவர் தான் ஹரிஷ் கல்யாண். அதன் பின் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளிவந்த ‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பெட் ராஜா இதய ராணி’, ‘தாராள பிரபு’ போன்ற படங்கள் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்திருக்கிறது.
இதில் ‘தாராள பிரபு’ இந்தி படத்தின் ரீமேக். அதனையடுத்து தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பெல்லி சூப்புளு’ என்ற படத்தின் ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக முதன் முறையாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு வேலைகள் முற்றிலும் முடிந்து தற்பொழுது வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.
பெண் ரசிகைகளை அதிகமாக கொண்ட ஹரிஷ் கல்யாண் முன்பே தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் ‘சிந்து சமவெளி’, ‘அறிந்து அறிந்து’, ‘சட்டப்படி குற்றம்’, ‘சந்தாமாமா’, ‘பொறியாளன்’, ‘வில் அம்பு’ போன்ற 6 படங்கள் நடித்துள்ளார்.

Sindhu Samaveli (2010) | Sindhu Samaveli Tamil Movie | Movie ...

சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஹரிஷ் கல்யாண், தனது முதல் படமான ‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்தது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

‘சிந்து சமவெளி’ பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு ஹரிஷ் கல்யாண், “நான் அந்த படத்தில் நடிக்கும்போது அந்த அளவிற்கு எனக்கு சினிமா அனுபவம் இல்லை, ஆனால் முழு கதையையும் கேட்டு விருப்பப்பட்டுதான் நடித்தேன். அதைப்பற்றி வருத்தப்படுவதற்கும், தவறாக அந்த படத்தை தேர்வு செய்து விட்டேன் என பலரும் சொல்வதற்கும் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை”.

“சிந்து சமவெளி படத்தில் நடித்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதைப்பற்றி நான் யோசிப்பதும் இல்லை, கவலைப்படுவதும் இல்லை” என தான் அறிமுகமான சர்ச்சைக்குரிய படமான சிந்து சமவெளி திரைப்படத்தை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார் ஹரிஷ் கல்யாண்.

Related Articles

9 Comments

  1. Howdy! I’m at work surfing around your blog from my new iphone 4! Just wanted to say I love reading through your blog and look forward to all your posts! Carry on the fantastic work!

  2. Heya i am for the first time here. I found this board and I in finding It really useful & it helped me out much. I’m hoping to offer one thing again and aid others such as you helped me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button