கோவை

சாலையில் சிதறிக் கிடந்த பணம் – யாரிடம் ஒப்படைக்கப்பட்டது!!!

கோவை அருகே சாலையில் சிதறிக் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வனக் காவலருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் சுண்டப்பாளையத்தில் இருந்து – தாளியூர் செல்லும் சாலையில், சென்று கொண்டிருந்த வனக்காவலர் செல்வராஜ் பார்வையற்றோர் பள்ளி அருகே சாலையில் ஓரத்தில் 500 ரூபாய் நோட்டுக்கள் சிதறிக் கிடந்ததைப் பார்த்து அவற்றை சேகரித்துள்ளார்.

அதில் 17 ஆயிரத்து, 500 ரூபாய் கிடைத்துள்ளது, பணத்தை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைதுள்ளார் வனக்காவலர் செல்வராஜ். பணம் யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வனக்காவலரின் நாணயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags

Related Articles

One Comment

  1. I simply could not leave your website before suggesting that I actually loved the usual information an individual provide on your guests? Is going to be back often to inspect new posts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close