செய்திகள்

சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா…

சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ஐ. பால்துரைக்கும், வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், துணை ஆய்வாளர் ரகுகணேஷ் மற்றும் காவலர்களை காவலில் எடுத்து சிபிஐ ஏற்கனவே விசாரித்தது.

அதனை தொடர்ந்து சமீபத்தில் கைது செய்யப்பட்ட காவலர்கள் செல்லதுரை, சாமதுரை, வெயில் முத்து ஆகியோரை விசாரிப்பதற்காக, அவர்களை சிபிஐ மூன்று நாட்கள் காவலில் எடுத்தது. ஆனால் அவர்களிடம் விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஒரு நாளுக்கு முன்னதாகவே சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை முடித்துக் கொண்டனர். இந்நிலையில் தற்போது மேலும் இரண்டு சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. பால்துரை க்கும் கொரோனா நோய்த்தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறையில் உள்ள எஸ்.எஸ்.ஐ பால்துரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Related Articles

3 Comments

  1. Hey there! I just wanted to ask if you ever have any issues with hackers? My last blog (wordpress) was hacked and I ended up losing many months of hard work due to no back up. Do you have any methods to protect against hackers?

  2. Wonderful blog! Do you have any suggestions for aspiring writers? I’m hoping to start my own blog soon but I’m a little lost on everything. Would you suggest starting with a free platform like WordPress or go for a paid option? There are so many choices out there that I’m completely overwhelmed .. Any tips? Thanks!

  3. Hi there, just became aware of your blog through Google, and found that it is truly informative. I am going to watch out for brussels. I will be grateful if you continue this in future. Many people will be benefited from your writing. Cheers!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button