இந்தியா

கொரோனாவை எதிர்த்து போராடும் ‘அண்ணி அப்பளம்’- அறிமுகப்படுத்திய பாஜக அமைச்சர்

கொரோனா வைரசை எதிர்த்து போராட பாபிஜி அப்பளம் என்ற ஒன்றை பாஜக மத்திய அமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார்.இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரக தொழில்துறை இணை அமைச்சராக உள்ளவர் அர்ஜுன் ராம் மேக்வால். இவர் ராஜஸ்தான் நிறுவனம் தயாரித்துள்ள ‘பாபிஜி பப்பட்’ என்னும் அப்பளம் ஒன்றை அறிமுகம் செய்து வைத்தார். இந்தியில் பாபிஜி என்றால் அண்ணி பப்பட் என்றால் அப்பளம்’ என்பது பொருளாகும்.

இதையடுத்து பாபிஜி அப்பளத்தை பிரபலப்படுத்தி காணொளி வெளியிட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், “ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ், ஒரு உற்பத்தியாளர் ‘பாபிஜி அப்பளம்’ என்ற பெயரில் அப்பள நிறுவனம் தொடங்கியுள்ளார். இது கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். அவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பாபா ராம்தேவ் கொரோனாவுக்கு தான் மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறியிருந்தார். அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்த நிலையில் பாஜக மத்திய அமைச்சரும் இவ்வாறு கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

5 Comments

  1. I have recently started a blog, the info you provide on this web site has helped me tremendously. Thank you for all of your time & work. “So full of artless jealousy is guilt, It spills itself in fearing to be spilt.” by William Shakespeare.

  2. Great ?V I should definitely pronounce, impressed with your site. I had no trouble navigating through all tabs as well as related information ended up being truly simple to do to access. I recently found what I hoped for before you know it at all. Reasonably unusual. Is likely to appreciate it for those who add forums or anything, website theme . a tones way for your customer to communicate. Nice task..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button