அரசியல்இந்தியாகவர் ஸ்டோரி

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் விவகாரம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, அரசுக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியதுடன், கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் அவர்கள் பங்கேற்கவில்லை.

இதையடுத்து கட்சி தாவல் சட்டத்தின் அடிப்படையில், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரையும் சபாநாயகர் சி.பி, ஜோஷி தகுதி நீக்கம் செய்தார்.

சபாநாயகரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என உத்தரவிட்டது.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் சபாநாயகரின் மேல்முறையீட்டு மனு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், மத்திய அரசையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

4 Comments

  1. Its such as you learn my mind! You appear to grasp so much approximately this, like you wrote the guide in it or something. I think that you can do with some percent to drive the message house a little bit, but other than that, that is magnificent blog. A great read. I’ll definitely be back.

  2. It is the best time to make a few plans for the long run and it is time to be happy. I have read this post and if I may I want to recommend you some interesting things or advice. Perhaps you could write next articles referring to this article. I want to read even more issues approximately it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button