மற்றவை

இந்த பாம்பு கடித்தால் 4 மணி நேரம் தான்!

இந்தியாவில் பல வகையான விலங்குகள், பறவைகள், நீர் சார்ந்த உயிரினங்கள் போன்றவை இருக்கின்றன. அவைகள் எல்லாமே பயங்கரமானவை அல்ல. பொதுவாக விலங்குகளை வீட்டு விலங்குகள்(Domestic Animal), காட்டு விலங்குகள்(Wild Animal) என்று இரு வகையாக பிரிப்பர். அதில் ஆடு, மாடு, நாய், பூனை போன்றவையெல்லாம் வீட்டு விலங்காகவும்; புலி, சிங்கம், கரடி, பாம்பு, யானை, நரி போன்ற பல காட்டு பாவிகின்றனர். இந்த விலங்குகள் பட்டியலில் ‘பாம்பு’ தான் அதிகம் விஷம் வாய்ந்தது என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இந்திய அளவில் என்று எடுத்து கொண்டால் மிக பயங்கரமான விலங்கு என்ற பட்டியலில் ‘பாம்பு’ தான் முதலிடத்தை பிடித்திருக்கிறது.

ஏனென்றால் கடந்த 20 ஆண்டுகளில் ஏறத்தாழ 12 லட்ச மக்கள் பாம்பு கடியால் இறந்திருக்கக்கூடும் என்ற ஒரு கணக்கும் உண்டு. உலக அளவில் என்று எடுத்துக்கொண்டால் ஆண்டுதோறும் ஏறத்தாழ 1,25,000 மக்கள் நச்சுப் பாம்புக்கடியால் இறக்கின்றனர் என்ற ஒரு ஆய்வும் உண்டு.

ஒரு இந்திய நாகத்தின் விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்கி பக்கவாதம், இருதய மற்றும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் 270ற்கும் அதிகமான பாம்புகள் இருக்கின்றன. அதில் 60 மிக விஷத்தன்மை உடையது.

இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் பெரும்பாலான இறப்புக்களுக்கு இந்த 4பாம்புகள் தான் காரணமாம்!:👇👇
நல்லப்பாம்பு , கட்டு விரியன் (எண்ணெய் விரியன்), சுருட்டை பாம்பு, கண்ணாடி விரியன். இந்த நான்கையும் ‘BIG 4’ என்று அழைப்பர்.

இதிலும் மோசமானது கட்டு விரியன் மற்றும் கண்ணாடி விரியன். இந்த இரு பாம்புகளுமே இரவில் இரையை தேடுக்கூடியவை.

ஆனால் இந்த இரு பாம்பிலும் ‘கண்ணாடி விரியனே’ பயங்கரம்.
கட்டுவிரியனுக்கு சிறிய பல் என்றால், கண்ணாடி விரியனுக்கு பெரிய பல்.
கட்டு விரியன் கடித்தால் அந்த விஷம் நரம்பு மண்டலத்தை தாக்கி, உடலில் உள்ள செயல்பாட்டு திறனை இழக்க செய்யும். மேலும் கடித்த 6-7 மணி நேரத்தில் சாவு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. கண்ணாடி விரியன் கடித்தால் உடனே அதனின் விஷம் நம் உடலினுள் சென்று 1 மணி நேரத்தில் அதிக அளவு இரத்த கசிவு அல்லது இரத்தத்தை உறைய வைக்கும் அளவிற்கு வீரியமானது.

நல்லபாம்பு கடித்து இறந்தவர்களை விட இந்த இரு பாம்பு கடித்து இறந்தவர்கள் தான் அதிகம்.

இவ்வளவு வேறுபாடுகள் இருக்க, உணவு என்ற இடத்தில் இரண்டும் ஒற்றுமை வகிக்கிறது. இரண்டுமே தவளை, பல்லி, எலி என்று கிடைக்கக்கூடியதை சாப்பிடக்கூடியது.
கண்ணாடி விரியனானது, சில நேரங்களில் மற்ற பாம்புகளை சாப்பிடும் பழக்கம் உடையது. ஆனால் கட்டு விரியன், பசிக்கும்பொழுது தனது குட்டிகளையும் இரையாக்கிக்கொள்ளும்.

ஆனால் இனப்பெருக்கத்தில் இரண்டும் சற்று வித்தியாசமானவை. கண்ணாடி விரியன் கர்ப்பம் தரித்து குட்டிகளை ஈனும் வகையைச் சார்ந்தது. கட்டு விரியன் முட்டையிட்டு குஞ்சுகளை ஈனும் வகையைச் சார்ந்தது.

கண்ணாடி விரியன் கடித்தால், வலி வேதனை என்று எதுவும் இருக்காது. இதனால் தான் முதலுதவி என்று எதுவும் எடுத்துக்கொள்ள முடியாமல் போகிறது. எனவே அதிக உயிரிழப்பும் நிகழ்கிறது. எனவே நாமும் சற்று கவனத்துடன் இருந்தால் உயிரிழப்பை தவிர்க்க வாய்ப்பு உண்டு.

ஆனால் இன்றும் நம் ஊர்களில் இவற்றை கடவுளாக பாவித்து வணங்கி வருகின்றனர். இதை அவர்களுடைய நம்பிக்கை என்று கூறுவதா? அல்லது மூட நம்பிக்கை என்று கூறுவதா?
அனைத்தும் ஒரு உயிர் தான். அதை கொள்வது தவறு என்பதற்கேற்ப இந்தியாவில் “வன உயிர் பாதுகாப்பு சட்டம் 1972″ -ன் படி இவ்வகை பாம்புகள் அனைத்தும் பாதுகாக்கப்படுகிறது.

Related Articles

5 Comments

  1. I am now not certain where you are getting your info, but great topic. I must spend a while finding out more or working out more. Thanks for great info I used to be looking for this info for my mission.

  2. It is the best time to make some plans for the future and it’s time to be happy. I’ve read this post and if I could I wish to suggest you few interesting things or suggestions. Perhaps you can write next articles referring to this article. I wish to read even more things about it!

  3. Pretty section of content. I just stumbled upon your site and in accession capital to assert that I get actually enjoyed account your blog posts. Any way I’ll be subscribing to your augment and even I achievement you access consistently rapidly.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button