தூத்துக்குடி

ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு – மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

ஓட்டப்பிடாரம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியை அரிவாளால் வெட்டி நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே முப்புலிவெட்டி கிராமத்தை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மனைவி கோசலை, இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர்.  இவருக்கு ஐந்து மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இன்று தங்கவேல் நூறுநாள்  வேலை திட்டத்திற்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த கோசலையை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி, அவர் அணிதிருந்த சுமார் ஏழரை பவுன் மதிப்புள்ள நகையை எடுத்து சென்றுள்ளனர்.

இது குறித்து கோசலை அரிவாள் வெட்டுடன்  தனது மருமகளுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளர். தகவலறிந்து ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த கோசலையை சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு மணியாச்சி டி.எஸ்.பி சங்கர் மற்றும் தூத்துக்குடி தடயவியல் துறையினரும் நேரில்சென்று ஆய்வு செய்தனர்.

 

Related Articles

3 Comments

  1. Thank you, I have recently been searching for information approximately this topic for a long time and yours is the greatest I’ve found out so far. However, what concerning the conclusion? Are you certain in regards to the source?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button