கவர் ஸ்டோரிதமிழ்நாடு

லாரி ஸ்டிரைக் – காய்கறிகள் விலை உயரும் அபாயம்

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, தமிழக முழுவதும் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். லாரிகள் ஓடாததால், பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் ஆங்காங்கே தேக்கமடைந்துள்ளன.

சாலை வரி குறைப்பு, டீசல் விலை அதிகரிப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், டேங்கர் லாரி உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர் சங்கம் மற்றும் வாடகை வேன் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைப்புகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் தமிழக முழுவதும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால், நாள் ஒன்றுக்கு ரூ.250 கோடி இழப்பு ஏற்படும் என்று லாரி உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

Related Articles

5 Comments

  1. I simply could not leave your website prior to suggesting that I extremely enjoyed the standard information an individual supply for your guests? Is going to be back regularly in order to check out new posts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button