அரசியல்தமிழ்நாடு

திமுகவில் இணைகிறார் பாஜகவின் மாநில செயலாளர்

பாஜகவில் மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் வேதரத்தினம் திமுகவில் இணையவிருக்கிறார்.

வேதாரண்யம் தொகுதியில் திமுக சார்பில் தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்டு வென்றவர் வேதரத்தினம்.  பின்னர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், 2016 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2016 இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் வேதரத்தினம் சொந்த ஊரான தேத்தாக்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பின்னர் வேதரத்தினத்துக்கு பாஜகவில் மாநிலச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் வேதரத்தினம் மீண்டும் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button