இந்தியாமருத்துவம்

டிசம்பரில் இந்திய மக்களுக்கு கிடைக்கும் கொரோனா தடுப்பு மருந்து

மனிதர்களுக்கு செலுத்தி பார்த்ததில் வெற்றி கண்டுள்ள ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, இந்தியாவில் டிசம்பரில் கிடைத்து விடும். இதற்காக 100 கோடி ‘டோஸ்’ தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த ஏதுவாக இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தடுப்பூசி பரிசோதனை முடிவை இந்திய மருத்துவ நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படியும், இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் குறித்த தகவலின்படியும், இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி பயன்பாட்டுக்கு கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button