தமிழ்நாடுதர்மபுரி

சிவன் கூப்பிடுகிறார் என்று கூறி தற்கொலை செய்துகொண்ட இளைஞர்- அதிர்ச்சி தகவல்கள்

சிவன் கூப்பிடுவதால் அவரிடம் போகிறேன் என்று சொல்லி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்தவர் மகாதேவன்(24). ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தவர் திடீர் என காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவர் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.

அதை தொடர்ந்து அவரை தேடி வந்த போலிசாருக்கு, வெள்ளங்கி மலையிலுள்ள ஒரு மரத்தில் சடலமாக இளைஞர் கிடக்கிறார் என்கிற தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார், அந்த இளைஞர் காணாமல் போன மகாதேவன் தான் என்று கண்டுபிடித்தனர்.

பின் சடலத்தை மீட்ட போலீசார், மகாதேவன் பாக்கெட்டில் ஒரு லெட்டர் இருப்பதை கண்டுபிடித்தனர். அதில், “அப்பா, அம்மா, என்னை மன்னிச்சிடுங்க.. சிவன் என்னை கூப்பிட்டுட்டே இருக்கார், அவரிடம் போகிறேன், என் சாவுக்கு யாரும் காரணம் கிடையாது, நீங்கள் நிம்மதியாக இருங்க” என்று எழுதி வைத்திருந்தார்.

மேலும் இது குறித்து விசாரித்த போலீசார் .மகாதேவன் காணாமல் போவதற்கு 5 நாளுக்கு முன் காரமடையில் வசிக்கும் தன்னுடைய அண்ணனின் செல்போன் நம்பருக்கு வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதிலும் “நான் சிவன்கிட்ட போறேன், குடும்பத்தை பார்த்துக்கோ” என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவர்கள் உடனடியாக மகாதேவனுக்கு போன் செய்துள்ளனர். ஆனால் போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது. இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று போலீசார் முடிவுக்கு வந்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Related Articles

9 Comments

  1. Hey! Do you know if they make any plugins to assist with SEO?I’m trying to get my blog to rank for some targeted keywordsbut I’m not seeing very good gains. If you know of any please share.Many thanks!

  2. We are a group of volunteers and starting a new scheme in our community. Your website provided us with valuable information to work on. You’ve done a formidable job and our whole community will be grateful to you.

  3. Aw, this was a very nice post. In idea I wish to put in writing like this additionally – taking time and precise effort to make a very good article… but what can I say… I procrastinate alot and by no means seem to get something done.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close