சினிமாபொழுதுபோக்கு

சிம்புவின் ‘மாநாடு’ பட அப்டேட்!

இந்த கொரோனா லாக்டவுன் காரணமாக பல படப்பிடிப்புகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்புவின் அடுத்த படமான ‘மாநாடு’ பிப்ரவரி மாதம் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக போன நிலையில் லாக்டௌனின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தாயின் உத்திரவாதத்தில் மீண்டும் ...

ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பலரும் அவர்களது படத்தின் அப்டேட்டை வெளியிட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது ‘மாநாடு’ திரைப்படத்தின் அப்டேட்டை அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “நாங்கள் மட்டுமின்றி திரையுலகமே அரசின் அனுமதிக்காக தான் காத்துக்கொண்டிருக்கிறோம். அரசு பச்சை கோடி காட்டியவுடனே படப்பிடிப்பு தொடங்கி விடும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி சிம்புவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் சிம்புக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் உட்பட பலரும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button