அரசியல்இந்தியாகவர் ஸ்டோரி

கட்சித் தலைமைக்கு எதிராக திரும்பும் பாஜக OBC எம்.பி.க்கள்! பாஜக தலைமை அதிர்ச்சி

மத்திய அரசின் முடிவை எதிர்த்து ட்வீட் போடுமாறு பாஜகவின் ஓபிசி (OBC) நாடாளுமன்ற குழுவின் தலைவர் கணேஷ் சிங் பிரதமர் மோடியை தவிர இதர 112 ஓபிசி(OBC) பாஜக எம்.பி.க்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது கிரிமீ லேயர் பிரிவில் (Creamy Layer) சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது தவறான முடிவு. மேலும் அதன் உச்ச வரம்பை 15 லட்சமாக உயர்த்த வேண்டும். மேலும் தற்போது, இருக்கும் நடைமுறையே தொடர வேண்டும்,  அதை மாற்ற அரசு முயற்சி செய்யக் கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு ட்வீட்” மூலம் கோரிக்கை வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஓபிசி(OBC) வகுப்பினரில் பொருளாதார நிலையில் முன்னேற்றம் கண்டவர்கள் தான் கிரீமி லேயர் (Creamy Layer) என்று அழைக்கப்படுகின்றனர்.  அதாவது ஆண்டு வருமானம் 8 லட்சத்துக்கு மேல் இருக்கும் பொறியாளர்கள், டாக்டர்கள், சினிமா துறையினர், விளையாட்டு வீரர்கள், வக்கீல்கள், சி.ஏக்கள், கணக்காளர்கள், கட்டடக் கலை நிபுணர்கள், கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள், ராணுவத்தில் உயர் பதவி வகிப்பவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் , மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் உள்ள குரூப் 1, 2 ஆகிய அந்தஸ்துடைய அதிகாரிகள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள் ஆகியோர் இந்த கிரீமி லேயர்(Creamy Layer) பிரிவில் வருவார்கள்.

இந்த பிரிவில் வருவோர் அரசின் இடஒதுக்கீட்டை பெறமுடியாது.

இந்த நிலையில் மத்திய அரசு இதில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்ததாக கூறப்பட்டது. அதன் படி இந்த வரம்பில் நிரந்தர வருமானம் இல்லாத சாதாரண மக்களையும் சேர்க்க முடிவெடுத்தது.  இதனால் மாத வருமானம் வாங்குபவர்கள், விவசாயிகள் போன்றோரும் இந்த கிரீமி லேயர் பிரிவில் வருவார்கள்.  இதனால் பலர் ஓபிசி(OBC) பிரிவில் இடஒதுக்கீடு பெரும் தகுதியை இழப்பார்கள் என்று தமிழகம் உட்பட நாட்டின் பல இடங்களில் எதிர்ப்புக்குரல் எழுந்தது.  இந்த நிலையில் பாஜக வின் ஓபிசி(OBC ) நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதை எதிர்த்து குரல் எழுப்பி உள்ளதால் இந்த முடிவில் இருந்து பாஜக அரசு பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாஜகவில் ஏற்பட்டுள்ள இந்த சலசலப்பு அரசியல் நோக்கர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button