சினிமாபொழுதுபோக்கு

என்றும் நினைவில் டி எஸ் பாலையா!

டி எஸ் பாலையாவின் 48 வது நினைவு நாளான இன்று அவரின் ஒரு நினைவு!

இப்ப உள்ள பிள்ளைங்களுக்கு லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்ல நம்ம ‘டி எஸ் பாலையா’ வ. அது ஒரு காலம். பிளாக் அண்ட் வைட் ல சினிமா பாத்தோம். அதுக்கு அப்புறமா எல்லாமே கலர் ல மாறிட்டு. படம் மாறினாலும் பலரோட நடிப்பு மட்டும் மாறல. அது அப்ப மட்டுமில்ல இப்பவும் என்னைக்கும் நம்ம மனசுல இருக்கும். அப்படி பட்ட இடத்துல இருக்கிறவங்க பட்டியலில் நம்ம டி எஸ் பாலையாவும் இருக்காங்க னு நினைக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு.

விரல் விட்டு என்னும் அளவுக்கு படம் நடித்திருந்தாலும் அந்த படத்தையும் அந்த நடிப்பையும் இது வர வேற யாரும் முழுமை படுத்தல.

பொதுவா நடிகர் நாகேஷுக்கும், டி எஸ் பாலையாவுக்கும் அப்படி ஒரு பொருத்தம். உதாரணமா அவங்க ரெண்டு பெரும் சேந்து நடிச்ச பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை, தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்கள் பல வருடங்கள் ஆனாலும் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்து இருக்கிறது.

அதிலும் காதலிக்க நேரமில்லை படைத்தை பற்றி இப்ப உள்ள நடிகர் மனோபாலா பகிர்ந்து கிட்ட ஒரு விசயம்:

நடிகர் மனோபாலா திரை இயக்குனராக இருந்த போது ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை ரீமேக் செய்ய விரும்பினார். அப்படத்தில் நாகேஷ், டி எஸ் பாலையாவின் காமெடி காட்சிகள் மக்களுக்கு அவ்வளவு பிடித்த கட்சியாக இருந்தது. குறிப்பாக நாகேஷ் அவர்கள் டி எஸ் பாலையாவிடம் திகில் கதை சொல்லும்போது டி எஸ் பாலையாவின் ரியாக்ஷன் அவ்வளவு அருமையாக இருக்கும்.

Kadhalikka Neramillai - Alchetron, The Free Social Encyclopedia

அப்படத்தின் ரீமேக் உரிமையை கடந்த 2007 ஆம் ஆண்டு வாங்கிய மனோபாலா, காதலிக்க நேரமில்லை பட இயக்குனரான சி.வி.ஸ்ரீதரிடம் ஆசி வாங்க சென்றிருந்தார். அப்போது யார் யார் என்ன கேரக்டரில் நடிக்க போகிறார் என்று அவர் கேட்க, அப்போது முடிவு செய்து வைத்திருந்த நடிகர்களை கூறினார் மனோபாலா. பின் டி எஸ் பாலையா கேரக்டர் யாருக்கு என்று கேட்டார் இயக்குனர்.

அதற்கு மனோபாலா, “அந்த கேரக்டருக்கு தான் இன்னும் ஆள் கிடைக்கல”. அந்த கேரக்டருக்கு நீங்க தேடினாலும் ஆள் கிடைக்க மாட்டாங்க. போய் வேற வேலைய பாருங்க சார் என்று கூறிவிட்டாராம் ஸ்ரீதர்.

பின் சில சிக்கல்கள் காரணமாக அப்படத்தை கைவிட்டார் மனோபாலா.

Related Articles

11 Comments

  1. I will right away grab your rss as I can’t find your e-mail subscription link or e-newsletter service. Do you have any? Kindly let me know in order that I could subscribe. Thanks.

  2. Greetings from California! I’m bored to tears at work so I decided to browse your site on my iphone during lunch break. I really like the knowledge you present here and can’t wait to take a look when I get home. I’m amazed at how fast your blog loaded on my cell phone .. I’m not even using WIFI, just 3G .. Anyhow, very good site!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button