கிரைம்தமிழ்நாடுவேலூர்

சிறையில் நளினி தற்கொலை முயற்சி – காரணம் என்ன ?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் வேலூர் மகளிர் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக, சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 28 ஆண்டுளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த 7 பேரையும் விடுவிக்க கோரி தமிழக அமைச்சரவை அளித்த பரிந்துரை மீது தமிழக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார்.

இந்த கொலை வழக்கில் கைதான முருகன், நளினி தம்பதியனர் தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், 15 நாட்களுக்கு ஒருமுறை இவர்கள் சந்தித்து பேச போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். தற்போது கொரோனா காரணமாக, வாட்ஸ்அப் வீடியோ கால்  மூலம் முருகன், நளினி தம்பதியனர் பேசி வருகின்றனர்.

இந்தநிலையில்,  நளினிக்கும், அவருடைய அறையில் தங்கியிருந்த மற்றொரு கைதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நளினியை மறைமுகமாக பெண் கைதி சரமாரியாக திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் சிறை காவலர் ஒருவர் திட்டியதால், நளினி மிகவும் மனவேதனை அடைந்துள்ளார்.

இதனையடுத்து சிறை அறையில் இருந்த துண்டால் கழுத்தை இறுக்கு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட சிறை காவலர்கள் உடனயாக அவரை மீட்டு, வேறொரு அறைக்கு மாற்றினர். நளினி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் வேலூர் பெண்கள் சிறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

7 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button