உலகம்

லிப்டில் 4 நாட்கள் சிக்கித் தவித்த தாய்-மகள்

லிப்ட்டில் 4 நாட்கள் சிக்கி கொண்ட தாய்-மகள் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. வடமேற்கு சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 82 வயது தாயுடன், 64 வயது மகள் வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், குடியிருப்புக்குள் அமைந்துள்ள லிப்டில் ஏறி இருவரும் மாடிக்கு  சென்றபோது, திடீரென பழுதாகி நின்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தாயும், மகளும் உதவிக்கு அழைத்துள்ளனர்.

அவர்களை காப்பாற்ற யாரும் வராததால், கடந்த 4 நாட்களாக லிப்ட் உள்ளே சிக்கி தவித்துள்ளனர். உயிர் பிழைக்க ஒருவருக்கொருவர் சிறுநீரைச் சேகரித்து குடித்துள்ளனர்.

4 நாட்களுக்கு பிறகு மீட்பு குழுவினரால் தாயார் மற்றும் மகள் மீட்கப்பட்டுள்ளனர். பின்னர் ஜியான் நகரில் உள்ள கயாக்சின் மருத்துவமனையில் இருந்து பூரண குணம் பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளனர். இச்சம்பவம் உலக முழுவதும் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Related Articles

4 Comments

  1. What i don’t realize is actually how you are not actually much more well-liked than you may be right now. You’re very intelligent. You realize therefore considerably relating to this subject, made me personally consider it from so many varied angles. Its like men and women aren’t fascinated unless it’s one thing to accomplish with Lady gaga! Your own stuffs outstanding. Always maintain it up!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button