ஆந்திராகவர் ஸ்டோரி

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் திடீர் ரத்து

திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன்கள் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவில், கொரோனாவல் மூடப்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே கோவில் ஜீயர், கோவில் அர்ச்சர்கள், தேவஸ்தான ஊழியர்கள் என 140க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் திருப்பதில் உள்ள 48 வார்டுகள் நோய் தொற்று காரணமாக தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த சூழ்நிலையில், ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, கவுண்டர்களில் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன்கள் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, ஏழுமலையன் தரிசனத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்த நிலையில், கோவிலை மூடுவதற்கு வாய்ப்பே இல்லை என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

3 Comments

  1. Having read this I thought it was very informative. I appreciate you taking the time and effort to put this article together. I once again find myself spending way to much time both reading and commenting. But so what, it was still worth it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button