இந்தியாகவர் ஸ்டோரிகேரளாசினிமா

தங்க கடத்தல் ஸ்வப்னாவுக்கு சினிமாவுடன் தொடர்பு

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா, மலையாள திரைப்படங்களுக்கு பினாமி மூலம் பைனான்ஸ் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 5 ஆம் தேதி, துபாயில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கத்தை திருவனந்தபுரம் விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, சந்தீப் நாயர், ஸ்வப்னா சுரேஷ், சரித் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் 3வது குற்றவாளி பைசல் பரீத் துபாயில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வந்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரின் காவலை ஜூலை 24ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், கடத்தல் பணத்தைக் கொண்டு சினிமாவுக்கு பைனான்ஸ் செய்ததாக பைசல் பரீத் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் .4 மலையாள திரைப்படங்களுக்கு பினாமி மூலம் ஸ்வப்னா பைனான்ஸ் செய்ததாக அவர்  கூறியுள்ளார்.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close