விளையாட்டு

இங்கிலாந்து அபார வெற்றி, ட்ராவில் முடியவிருத்த போட்டியில் வெற்றிக்கனியை எட்டி பிடித்தது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவிக்க மேற்கிந்திய தீவுகள் அணி 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 129 ரன்களை குவித்து டிக்ளேர் செய்ய, 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. ஆனால் 1 நாள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த போட்டி சமனில் முடியும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இங்கிலாந்து அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமன் செய்யப்பட்டது.

Related Articles

3 Comments

  1. of course like your website however you need to check the spelling on quite a few of your posts. A number of them are rife with spelling problems and I to find it very bothersome to tell the truth on the other hand I?¦ll surely come back again.

  2. Very interesting information!Perfect just what I was looking for! “If you bungle raising your children, I don’t think whatever else you do matters.” by Jacqueline Lee Bouvier Kennedy Onassis.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button