உலகம்மருத்துவம்

ஆக்ஸ்போர்டுக்கு போட்டியாக கொரோனா மருந்தை கண்டுபிடித்ததாக அறிவித்த சீனா- யார் முதலில் வெளியிடுவார்கள் என்று போட்டி

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள நிலையில் அதற்கு போட்டியாக சீனாவின் நிறுவனமும் தாங்கள் கொரோனா மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலகநாடுகள் போட்டி போட்டு வருகிறது. இதில் ரசிய,சீன,அமெரிக்க நாடுகள் முன்னிலையில் உள்ளன. ரசியா ஏற்கனவே தாங்கள் கொரோனாவுக்கு மருந்துகண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தது.

இன்னொரு பக்கம் கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.ஆக்ஸ்போர்ட் உடன் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து இந்த சோதனையை செய்து வருகிறது.

இந்நிலையில் சீனாவும் மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளது பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close