உலகம்

அழியும் விளிம்பில் போலார் பனிக்கரடிகள்

போலார் பனிக்கரடிகள் இனம் 2100-ம் ஆண்டில் முழுவதும் அழிந்து விடும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பூமியின் வட துருவத்தில் பனிக்கட்டிகளால் நிரந்தரமாக மூடப்பட்டு இருக்கும் ஆர்க்டிக் பகுதி, தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக உருகி வருகிறது. இதனால் கடல் மட்டமும் உயர்ந்து வருகிறது. அங்கு வசிக்கும் உயிரினங்களும் அழியும் தருவாயில் உள்ளன.

குறிப்பாக போலார் பனிக்கரடிகள், ஆட்டிக் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வருகின்றன. இதனால், 2100 ஆம் ஆண்டில் இந்த அறிய வகை பனிக்கரடிகள் முற்றிலும் அழிந்துவிடும் என  கனடாவில் உள்ள டோரோண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தால், இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாகவும், இதனை தடுக்க தவறினால் பனிப்பகுதிகளில் வாழும் உயிரினங்கள் இல்லாமல் போய்விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Articles

2 Comments

  1. I like what you guys are up too. Such smart work and reporting! Carry on the excellent works guys I’ve incorporated you guys to my blogroll. I think it will improve the value of my web site :).

Leave a Reply to erjilopterin Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button