இந்தியா

பிரம்மபுத்திர ஆற்றில் வெள்ளப்பெருக்கு – கிராமங்கள் மூழ்கின

பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அசாமில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. https://twitter.com/ANI/status/1285130166788714496

அசாம் மாநிலத்தில் புரட்டு போடும் கனமழையால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளன. 26 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  மீட்பு பணிகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

அங்குள்ள காசிரங்கா வனப்பகுதியில் இருந்த 108 விலங்குகள் உயிரிழந்துவிட்டதாகவும் அரசு கூறியுள்ளது. இந்தநிலையில், பிரம்மபுத்திரா ஆற்றில் அபாயகரத்தை தாண்டி வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுவதால், டிப்ரகுரா கிராமம் தண்ணீரில் மூழ்கியது. முன்னெச்சரிக்கையாக அங்கு வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

அசாமில் பெய்து வரும் தொடர் கனமழையால், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் கொரோனா, மற்றொரு புறம் கனமழை, வெள்ளம் ஆகியவற்றால் அசாம் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close