சினிமாவைரல்

நடிகைகள் மோதல் – வைரலாகும் சர்ச்சை பேச்சு

சொந்த வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரிக்கு வனிதா விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை வனிதா, கடந்த மாதம் பீட்டா் பால் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டாா். தனக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக, பீட்டா் பாலின் மனைவி, வடபழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதனிடையே, வனிதா விஜயகுமாரின் திருமணம் குறித்து, தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி போன்ற திரையுலகினரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

இதனால் மன வேதனை அடைந்த நடிகை வனிதா விஜயகுமாா், தனது சொந்த வாழ்க்கையை பற்றி சமூக ஊடகங்களில் அவதூறாக தகவலை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போரூா் எஸ்.ஆா்.எம்.சி. காவல் நிலையத்தில் புகாா் அளித்தார்.

இந்நிலையில் தன் திருமணத்துக்கு எதிராகப் பேசும் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோருக்கு தனது டுவிட்டரில் வனிதா விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். உங்கள் வாழ்க்கை போரடிப்பதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், தன்னுடைய வாழ்க்கை எப்போதும் போல அட்டகாசமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

யூடியூப் பேட்டிகளில் புனிதர் போலவும், வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் நடந்துகொள்ளும் உங்களது நாடகங்களை இனி நிறுத்திக்கொள்ளுங்கள் என்று லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரிக்கு அவர் கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகைகளின் சண்டை கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

5 Comments

  1. I keep listening to the newscast speak about getting boundless online grant applications so I have been looking around for the top site to get one. Could you tell me please, where could i acquire some?

  2. Howdy! Quick question that’s completely off topic. Do you know how to make your site mobile friendly? My weblog looks weird when viewing from my iphone4. I’m trying to find a template or plugin that might be able to fix this problem. If you have any recommendations, please share. Thanks!

  3. This is the appropriate weblog for anybody who needs to seek out out about this topic. You understand a lot its nearly hard to argue with you (not that I really would want…HaHa). You undoubtedly put a new spin on a topic thats been written about for years. Nice stuff, simply nice!

Leave a Reply to Gilbert Aumen Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button